தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையற்கலை வல்லுனராக திகழ்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். குறிப்பாக இவர் நிகழ்ச்சிகளுக்கு தனது குழுவுடன் கேட்டரிங் செய்து வருகின்றார். சமீபத்தில் நடைபெற்ற ரம்யா பாண்டியனின் இல்ல விழாவிலும் இவருடைய சமையல் தான் பிரபலமாக பேசப்பட்டது.
2019 ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் மாதம்பட்டி ரங்கராஜ். அதன் பின்பு பென்குயின் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பற்றி வருகின்றார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனினும் கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரியப் போவதாகவும், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை காதலிப்பதாகவும் கிசுகிசு தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை திடீரென திருமணம் செய்தார். அடுத்த நாளே அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்தடுத்து ஷாக்கிங் நியூஸ் வெளியாகின. அது மட்டும் இன்றி மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும், எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும் எனவும் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்து மீடியாவுக்கும் பேட்டி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் 'பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்.. தர்மம் ஜெயிக்கும்..' என்று மாதம்பட்டி ரங்கராஜை நேரடியாகவே தாக்கி பேசி உள்ளார். தற்போது இவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

Listen News!