• Sep 05 2025

நாய்களுக்கு குரல் கொடுக்குறவங்க,மக்கள் பிரச்சனையில மௌனமா?டாக்டர் ஷர்மிளா கேள்வி?

Roshika / 10 hours ago

Advertisement

Listen News!

தெருநாய்கள் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில், தெருநாய்கள் கடித்து ஒரு இளைஞர் உயிரிழந்தது மக்கள் மனதில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கோரி பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.


இந்த நிலையில் சிலர், "உங்களால தீர்வு சொல்ல முடியாதா? அப்படியென்றால் சாலையில் போராட்டம் எதற்காக?" என்ற கேள்வியுடன், போராட்டத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர். இது போராடும் மக்களில் கூடுதல் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர்கள் கோபி மற்றும் அம்மு போன்றோர், இதுபோன்ற பிரச்சனைகளில் எதையும் கையாண்டதாக எந்த ஆதாரமும் இல்லாதது குறித்து மக்கள் சிக்கல் உணர்கின்றனர். தெருநாய்களுக்கு உணவு போடும் நலவாரியங்கள், அவை ஏற்படுத்தும் ஆபத்துகளில் மௌனம் காக்கும் நிலை நீடிக்கிறது.


இந்த சூழ்நிலையில், நடிகையும் சமூக அவலருமான டாக்டர் ஷர்மிளா, சமூக வலைத்தளங்களில் தனது கூர்மையான கருத்தை பகிர்ந்துள்ளார். “நாய்களுக்கு சோறு போடுறீங்க சரி. ஆனா அவங்க தெருவில் நடமாடி மனிதர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்துறாங்க. அதைத் தடுக்க யாரும் குரல் கொடுக்கல. தூய்மை பணியாளர்களும் இதுவரை போராட்டம் பண்ணல. பொதுமக்கள் பாதிக்கப்பட்ற நேரம் தான் யாரும் கேட்கல.” அரசாங்கம் இதுவரை தெருநாய்கள் பிரச்சனையில் எந்தத் தீர்வும் வழங்காமல் இருப்பது, மக்கள் நம்பிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement