தெலுங்கு வரலாற்றின் புனிதத்தை தழுவி உருவாகும் திரைப்படம் "கண்ணப்பா" . இத் திரைப்படத்தினை முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இந்த படமானது சிவபக்தரான இந்து மதத்தில் கண்ணப்பாவின் புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு சமூக வலைத்தளபக்கத்தில் பதிவிடபட்டுள்ளது .இவ் வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்ப்பு எழுந்துள்ளது .
இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளதுடன் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .இத் திரைப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸ்ஸி இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் திகதி திரையரங்களில் வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் படத்திற்கான மேக்கிங் வீடியோ வெளியீடு படத்திற்கான அறிவிப்பினை உறுதி செய்துள்ளது . இத் தகவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவகின்றது .
Listen News!