• Jul 18 2025

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய் நிறுத்தி விட்டுள்ளார். கடந்த இரவு GQ ஷூட்டுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அழகுக்கும், ஃபேஷனுக்கும் இணையான வரையறையாக மாறி விட்ட மாளவிகா, இந்த ஷூட்டில் மிகவும் மோட்டர்ன் மற்றும் கிளாமரஸ் லுக்கில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்திருக்கிறார்.


மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ள ஒரு பன்முக நடிகை. சினிமா உலகம் மாளவிகாவுக்கு புதிதல்ல. ஆனால், அந்த வாய்ப்பை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தனது திறமையை நிரூபித்து, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக Instagram-இல், அவர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தனது வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள், ஃபேஷன் ஃபோட்டோஷூட்கள், படப்பிடிப்பு காட்சிகள், உடற்பயிற்சி வீடியோக்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். 


அண்மையில் அவர் வெளியிட்ட ஃபேஷன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.அவர் அணியும் உடைகள்  மூலம் தனது  ரசிகர்களை கவர்ந்துள்ளார் .மேலும் இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தில் வனத்தின் நிறத்தினைபோன்ற நீல  நிறத்தில் ஆடை அணிந்து பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார் . 


மாளவிகா மோகனன் இப்போது தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மட்டுமல்ல, ஒரு ஃபேஷன் & கலாசார சின்னமாகவும் உருவெடுத்துள்ளார். GQ ஷூட்டில் அவர் காட்டிய தைரியமான ஸ்டைலும், கம்பீரமான பார்வையும், அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல், ஃபேஷன் உலகையும் வியக்க வைத்துள்ளது. 




Advertisement

Advertisement