• Jul 18 2025

முத்து வைத்த பொறிக்குள் வசமாக சிக்கிய மனோஜ்... விஜயாவுக்கு மீனா வைத்த செக்.! மூக்குடைந்த ரோகிணி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா மனோஜ் வீட்டுக்கு வந்து எலுமிச்சை பழத்தை சாமி ரூமுக்குள் வைக்க, அங்கு வந்த முத்து இது எதற்கு என்று கேட்கின்றார். அதற்கு விஜய, வீட்டின் நல்லதுக்காக கொண்டு வந்ததாக என்னென்னமோ சொல்லி சமாளிக்கிறார்.

இதை தொடர்ந்து கிச்சனில் முத்து மீனாவிடம் மனோஜ் பயப்பிடுறது அப்படியே தெரியுது. அதனாலதான் பார்வதி ஆன்ட்டி  கூட சாமியார போய் பார்த்து எலுமிச்சை பழத்தை மந்திரிச்சு கொண்டு வந்திருக்காங்க என்று நடந்தவற்றை அப்படியே சொல்லுகிறார்.

அதன் பின்பு மனோஜ் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க முத்து கதவை தட்டி விட்டு ஒழிந்து இருக்கின்றார். இதனால் பயப்பட்ட மனோஜ் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க எழுமிச்சை பழத்தைக் கட்டி மனோஜ்க்கு தூக்கி எறிந்து அதை பின்பு இழுத்து எடுக்கின்றார் முத்து. இதனால் பயப்பட்ட மனோஜ் விஜயாவுக்கு போன் பண்ண, அவரும் தூங்க வில்லை என்று ஹாலுக்கு வருகிறார்கள். 


இதை அடுத்து அந்த பழத்தை எடுத்து வீசுவோம் என முடிவு செய்து இருவரும் முத்து வைத்த பழத்தையும், தாங்கள் கொண்டு வந்த பழத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வர, முத்து லைட்டை போட்டுக்அவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறார். இதனால் எல்லாரும் வந்து என்ன செய்றீங்க எனக்  கேட்கவும் இது வீட்டுக்கு நல்லதில்ல அதனாலதான் தூக்கி எறிய போறோம் என்று சொல்ல, அப்படி என்றால் நீங்க வைத்த பழத்தையும் எதற்கு எடுத்தீர்கள் என செக் வைக்கின்றார் மீனா.

அண்ணாமலையும் என்ன நடந்தது என்று கேட்க, விஜயா மழுப்பிக்  கொண்டு இருக்கின்றார். அங்கு வந்த ரோகினியும் மனோஜை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ரூம் உள்ளே போக முத்து அதை தடுத்து இப்ப நீ உண்மையை சொல்லு என விடாப்பிடியாக நிற்கின்றார். இவ்வாறு வசமாக விஜயாவும் மனோஜும்  மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement