தமிழ் சினிமாவில் சமூக உணர்வுகளுடன் கூடிய படைப்புகள் மூலம் பிரபலமான இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது வெளியான ‘மோனிகா...’ பாடல் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இவர் கூறிய சில வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வைரலாகி வரும் ‘மோனிகா’ பாடல், அதன் இசை, வீடியோ மற்றும் அதிலுள்ள நடன காட்சிகளால் பலரது மனதையும் கவர்ந்துள்ளது.
இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பல கருத்துகளை எழுப்பியுள்ளார். அதன்போது அவர், "50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்ணை ஆட வைக்கும் சினிமாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றீர்கள். 50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் ஆடும்போது ஏன் தடுத்து நிறுத்தவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடினால் அது காதல். சுற்றி பல ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் ஆடுவதை எப்புடி புரிந்து கொள்வது." எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாரி செல்வராஜின் இந்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பல்வேறு தரப்பினரிடமும் எதிர்வினைகளை கிளப்பியிருக்கின்றது.
Listen News!