• Sep 07 2025

50 ஆண்டுகளுக்கு மேலான சினிமா சாதனை... மம்முட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் 50 வருடங்களுக்கும் மேல் கலங்கரை விளக்கமாக திகழ்பவர் என்றால் அது நடிகர் மம்முட்டி தான். மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாது, இந்திய சினிமா வரலாற்றிலும் தன்னிச்சையாக  தடம் பதித்துள்ள மம்முட்டி, இன்று தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.


1971ம் ஆண்டு முதல் சினிமாவில் பயணத்தைத் தொடங்கிய இவர், தற்போது வரைக்கும் அதிகளவான  திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில் நடித்துள்ள பெருமை மிக்க நடிகர். அவரது ஒவ்வொரு படமும், கதையம்சத்தாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக, தற்போது அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது.


சமீபத்திய தகவலின்படி, நடிகர் மம்முட்டியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 340 கோடிகள் ஆகும் என கூறப்படுகிறது. இது அவருடைய நடிப்பு வருமானம், விளம்பர ஒப்பந்தங்கள், சொந்த சொத்துக்கள் மற்றும் பிற முதலீடுகளின் மூலம் உருவானது.

அத்துடன் மம்முட்டி ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் எடுக்கின்றார் எனவும் சில சமூக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement