• Sep 07 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மக்கள்.. வீடு கட்டிக் கொடுக்கும் ஹிந்தி நடிகர்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல், சமூக சேவைகளிலும் தனது தடங்களை பதித்துள்ளவர் நடிகர் சோனு சூட். அவரைப் பற்றிப் பேசும் போது, "ஃபிலிம் ஹீரோ" என்பதைக் காட்டிலும், "ரியல் ஹீரோ" என்பதே மக்கள் மனதில் தோன்றும் முதல் கருத்தாக காணப்படுகின்றது.


இந்நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், சோனு சூட் மீண்டும் தனது மனிதநேயத்தை நிரூபித்துள்ளார். பஞ்சாபில் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையின் அடிப்படை வசதிகளையும் இழந்துவிட்டனர்.


நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகள் அரசால் முன்னெடுக்கப்பட்டாலும், முழுமையான ஆதரவு எப்போது கிடைக்கும் எனத் தெரியாத சூழ்நிலையில், இந்த மக்கள் மிகுந்த துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் துன்பத்தில் இருக்கும் நேரத்தில், நடிகர் சோனு சூட் தனது சமூக வலைத்தளங்களில் ஒரு உணர்ச்சிப் பூர்வமான செய்தியைப் பகிர்ந்துள்ளார். " உங்கள் வீடுகளை இழந்துவிட்டீர்கள் என்றாலும், உங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். நாங்கள் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம். உங்கள் வாழ்வை மீண்டும் வழிப்படுத்த நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்." எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement