தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதற்காக சிலரும் விமர்சனங்களும் நக்கல்களும் செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, புளூசட்டை மாறன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு, சூர்யாவை நக்கலடித்திருக்கிறார்.
அதில், “சிங்கம் தான் கடைசி ஹிட்… தமிழ்ப்பட டைரக்டர்கள் என்னை கவுத்துட்டாங்க… இப்போ மலையாளம், தெலுங்கு டைரக்டர்ஸ் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன்…” என சூர்யா பேசுவது போல உருவாக்கிய வீடியோவில், லோகா படத்திலாவது கேமியோ வாய்ப்பு தருமாறு கோருவது போலவும், கேக் வெட்டுவது போலவும் நகைச்சுவையாக காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை சிலர் ரசித்தாலும், பலரும் கடும் விமர்சனம் செலுத்தி வருகின்றனர். "ஜெய் பீம்", "சூரரைப் போற்று" போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்மையில் "லோகா" படக்குழுவை ஊக்குவிக்கும் வகையில் சூர்யா கேக் வெட்டிய நிகழ்வும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்தச் செயல்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக நக்கலடிப்பது தவறு என ரசிகர்கள் கூறி வருகின்றனர். "நடிகர்களுக்கு வெற்றியும் தோல்வியும் இயல்பே. அந்த அடிப்படையில் இவ்வாறு கேலி செய்வது நேர்மையல்ல" என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Listen News!