• Jul 18 2025

படவிழாக்களில் கலந்து கொள்ள 5 லட்ஷம் கேட்கும் மிஷ்கின்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் தற்போது பிசாசு 2 மற்றும் ட்ரெயின் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். கடந்த சில வருடங்களாக இயக்கத்தில் தீவிரமாக இல்லை என பேசப்பட்ட நிலையில் தற்போது வெளியான ஒரு பட விழாவில் அவர் பேசிய வார்த்தைகள் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.


அந்த விழாவில் மிஷ்கின் “நானும் சினிமாவை விட்டு போக வேண்டும் தான் நினைக்கிறேன். என்னை தயவுசெய்து பட விழாக்களுக்கு அழைக்காதீங்க. அழைத்தால் 5 லட்சம் கொடுங்க. அதை வைத்து என் மகளை படிக்க வைப்பேன். இப்பல்லாம் விருப்பம் இல்லாமல் தான் சினிமால இருக்கிறேன். முந்தைய மாதிரி இல்லை இப்போ சினிமாவில் போட்டி கூட்டிட்டு ” என கூறியுள்ளார்.


மிஷ்கின் இப்படிப் பேசினார் என்ற செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது கடைசி சில படங்களை முடித்த பிறகு மிஷ்கின் சினிமாவில் இருந்து விலகப்போகிறார் என்ற ஊகங்கள் தற்போது இந்த பேச்சால் மேலும் உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement