தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு இனிமையான இடத்தைப் பிடித்தவர் நடிகை அபிநயா. இவர் “நாடோடிகள்” படத்தில் தனது அழகான நடிப்பின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றதுடன் தன்னுடைய தனித்துவமான திறமையால் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
இந்நிலையில், அபிநயா நீண்ட நாட்களாக வேகசேன கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்பொழுது அவரை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தற்போது, வேகேசன கார்த்திக்குடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளது அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. ‘நாடோடிகள்’ படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு இதனை அடுத்துப் பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அவற்றை மறுத்து தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார்.
திரை உலகில் தன் சொந்த அடையாளத்தை உருவாக்கி, சினிமாவுக்கு வெளியே வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழ்ந்து காட்டும் அபிநயா, இன்று ஒரு புதிய பயணத்தை தொடங்கியிருக்கின்றார். அவர் திருமண வாழ்க்கையைப் பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Listen News!