• Apr 26 2025

ஒளிப்பதிவாளர் இயக்குநர் சண்டை...! "பராசக்தி " படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்படுமா..?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

இறுதி சுற்று ,சூரரை போற்று போன்ற படங்களின் இயக்குநர் சுதா கெங்கார சூர்யாவை வைத்து புறநாநூறு எனும் படத்தை இயக்குவதற்கு தீர்மானித்து தற்போது அதே படத்தை சிவகார்த்திகேயன் ,ஸ்ரீலீலா ,அதர்வா ,ஜெயம்ரவியை வைத்து இயக்கி வருகின்றார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடிவடைந்து சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் முடிந்துள்ளது.


இந்த நிலையில் தற்போது படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிக்கே சந்திரன் மற்றும் இயக்குநருக்கு இடையில் ஒரு சின்ன சண்டை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும் தனது உதவியாளரை வைத்து இலங்கையில் படப்பிடிப்பை முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதைவிட இவருக்கு தக் லைப் படப்பிடிப்பின் போது சின்னதாக மாரடைப்பு வந்துள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியர்கள் இவரை ஒய்வு எடுக்க சொன்னதால் தான் படப்பிடிப்புகளுக்கு வரவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இருவருக்குமான சண்டையில் படப்பிடிப்பு சில தினங்களிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement