• Sep 03 2025

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் தெரியுமா.? படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஹாலிவூட் சாகசத் திரைப் பிரமாண்டமாக "ஜேம்ஸ் பாண்ட்" வரிசை திரைப்படம் விளங்குகின்றது. தற்போது அடுத்து தயாராகவுள்ள புதிய படத்தில் யார் புதிய பாண்ட் ஆக இருக்கப் போகிறார் என்பது ரசிகர்களுக்கிடையே பெரும் கேள்வியாக மாறியுள்ளது.


ஹாலிவூட் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில், மூன்று இளம் ஹீரோக்களின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர்கள் யார் தெரியுமா? டாம் ஹாலண்ட், ஜேக்கப் எலோர்டி, மற்றும் ஹாரிஸ் டிக்கின்சன்!


இந்த புதிய படம் தற்போது உருவாக இருப்பதுடன், ‘புதிய பாண்ட்’ யார் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் ஆர்வமும், ஊகங்களும் இருந்து வருகின்றன. அந்த தகவல்களின் அடிப்படையில் இந்த மூன்று பெயர்கள் மிகச் செல்வாக்குடன் காணப்படுகின்றன. அந்தவகையில் அடுத்த பாண்ட் யார்? என்பது குறித்த அதிகாரபூர்வ முடிவு விரைவில் வெளியாகும் என ஹாலிவூட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement