பிரபல தயாரிப்பாளரும் தொழில்துறையில் பரந்த அனுபவம் கொண்டவருமான லலித், தற்போது படைப்பாற்றலுடன் மூன்று புதிய திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளார். இதில் சிறப்பு அம்சமாக, அவரது மகனே மூன்று படங்களிலும் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
முதலாவது படம் "சிறை" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பரபரப்பான சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சி கலந்த குடும்பக் கதையாக "சிறை" உருவாகிறது.
இரண்டாவது படத்திற்கு தற்போது நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் ரைசிங் ஸ்டாராக விளங்கும் பசில் ஜோசஃப் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மூன்றாவது படத்திலும் லலித் தனது மகனுடன் இணைந்து நடிக்கும் வகையில், இன்னொரு பிரபல நடிகரை இணைக்கும் திட்டத்தில் இருக்கிறார். அவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய தொடர்ச்சியான தயாரிப்புகள் மூலம் லலித் தனது மகனுக்கான நடிகராகும் பயணத்துக்கு வலுவான அடித்தளமையையும், தமிழ் சினிமாவுக்கு புதிய முகத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டு செயல்படுகிறார்.
Listen News!