நடிகர் சிம்பு தற்போது மூன்று முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 50, மேலும் 'டிராகன்' பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 ஆகியவை தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சிம்புவின் புதிய ப்ராஜெக்ட் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமான '2018' ஐ இயக்கிய ஜூட் ஆண்டனி திசில்வா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் இருந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆனால் இப்போது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது. அந்தப் படத்தில் உலகளவில் புகழ்பெற்ற ஆக்ஷன் லெஜண்ட் ஜாக்கி சான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது சிம்புவின் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமாக எதிர்பார்க்கின்றனர். இந்த ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சிம்பு நடித்த 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!