தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஓடிடி தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதற்கு ஒவ்வொரு படமும் சான்றாக திகழ்கிறது. சமீபத்தில் ஓடிடியில் அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதலிடத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் உள்ளது. இது கிட்டத்தட்ட 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனையை உருவாக்கியுள்ளது. இரண்டாவது இடத்தில், விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ படம் உள்ளது.
மூன்றாவது இடத்தில் அஜித் நடித்த துணிவு படம், 16 மில்லியன் பார்வையாளர்களுடன் இருக்கிறது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் நான்காவது இடத்தையும், விஜய் நடிப்பில் வெளியான கோட் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
தனுஷ் நடித்த வாத்தி ஆறாவது இடத்தில் உள்ள நிலையில், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்த மெய்யழகன் ஏழாவது இடத்தில் உள்ளது. மணிரத்னம் மற்றும் கமல் இணைந்துள்ள இந்தியன் 2 எட்டாவது இடத்தில் இருக்க, பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
பத்தாவது இடத்தில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் 7.8 மில்லியன் பார்வையாளர்களுடன் உள்ளது. வெறும் பாக்ஸ் ஆபிஸைத் தவிர்த்து, ஓடிடி தரவுகளின் அடிப்படையிலும் தமிழ் சினிமா பலம் காட்டி வருகிறது.
Listen News!