• Sep 03 2025

அட்டகாசமான லுக்கில் வெளியான பிரியங்கா மோகனின் போஸ்டர்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் காணப்படுபவர் தான் தனுஷ். தனுஷ் தானே இயக்கி நடித்த திரைப்படம் தான் ராயன். இந்த திரைப்படம் தனுஷுக்கு ஐம்பதாவது திரைப்படமாகவும் வெற்றி திரைப்படமாகவும் காணப்படுகின்றது.

இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது 


இந்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடலான ‘Golden Sparrow’ விரைவில் வெளியாகவுள்ளது.

அதாவது இந்த படத்தின் நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் போஸ்டரை பகிர்ந்து Cameo-வாக நடித்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார் தனுஷ். தற்போது குறித்த போஸ்டர் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement