• Apr 26 2025

பிரியங்காவின் கணவர் இலங்கை தமிழரா..? அதுவும் அந்த அரசியல்வாதியின் வாரிசா..?

Mathumitha / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர். "சூப்பர் சிங்கர்", "கலக்கப்போவது யாரு", "ஸ்டார்ட் மியூசிக்" போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகத் திகழ்ந்தவர். 


இவர் சமீபத்தில் தனது காதலர் vj வசி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பெரிய ஈவென்ட் மனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. வசிக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் இந்த திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட VJ பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்த தமிழராம். அதோடு இலங்கை வாழ் தமிழர்களிடையே நல் ஆதரவைப் பெற்ற அரசியல்வாதி மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாம். இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியையும் வசி நடத்தி வருகிறாராம். அப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்காக பிரியங்கா இலங்கைக்கு செல்லும் போது வசி நண்பராக அறிமுகமாகியிருக்கிறார். இந்த நட்பே காதலாகி தற்போது திருமணம் செய்துள்ளார்கள்.

Advertisement

Advertisement