பிரபல ராப் பாடகர் வேடன் மீது ஏற்பட்டுள்ள பாலியல் தொந்தரவு புகாரை தொடர்ந்து, கேரள காவல்துறையினர் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Notice) பிறப்பித்துள்ளனர். வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேடன் தன்னை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் செய்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து, பொலிஸார் விசாரணையை தொடங்கினர். வேடன் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச எல்லைகளில் அவரைத் தடுக்கும் விதமாக எல்லா முக்கிய சந்திப்புகளிலும் காவல்துறையினர் தகவல் அனுப்பியுள்ளனர். இதன் மூலம் அவர் நாடு விட்டு செல்ல முடியாமல் தடுக்கும் முயற்சி நடைபெறுகிறது.
இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், "புகார் பெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். குற்றச்சாட்டுகள் துல்லியமாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. வேடனைக் கைது செய்யும் வரை தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும்" என தெரிவித்தனர்.
Listen News!