பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதராஸி’ திரைப்படம், வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியீடுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் வெளியாகியுள்ள முதல் பாடல் ‘சலமபல’ ஏற்கனவே ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகதாஸ் இந்த படம் குறித்து, “கஜினியின் எமோஷனும், துப்பாக்கியின் ஆக்ஷனும் கலந்ததாய் இருக்கும்” என கூறியிருந்தார். தற்போது படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் பின்னணிக் காட்சி (BTS) வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!