விஜய் டிவியின் பிரபல இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது தனித்துவமான அழகு, எளிமை மற்றும் கலக்கலான நகைச்சுவையால் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது கேரியர் தற்போது பல துறைகளில் விலாசமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
இசைப் பயணத்தில் பல மேடை கச்சேரிகளில் கலந்துகொண்டு முன்னணி பாடகர்களுடனும், இசையமைப்பாளர்களுடனும் பாடி வருகிறார். இந்நிலையில், சன் டிவியில் புதியதாக ஆரம்பிக்கவுள்ள நானும் ரெளடி தான் என்ற புதிய நிகழ்ச்சியில், VJ.அஸ்வத்துடன் இணைந்து தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார் சிவாங்கி.
அத்துடன், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படத்தில், சீன் ரோல்டன் இசையில் உள்ள பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார். ரசிகர்களிடையே இந்த பாடலும் விரைவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடல் மற்றும் நிகழ்ச்சி பயணத்துடன், சமூக வலைத்தளங்களிலும் சிவாங்கியின் அடையாளம் தொடர்ந்து பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் அவர் பகிர்ந்த க்யூட் மாடர்ன் லுக் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
Listen News!