• Apr 27 2025

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு.. ஆனால் இதுதான் உறுத்துது..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் அவ்வப்போது சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் சூரி நடித்து வரும் ’கொட்டுக் காளி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்தது.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று கூறிய நிலையில் சற்று முன் சமூக வலைதளத்தில் அவர் தயாரிக்கும் அடுத்த படத்தின் விவரங்கள் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் படி சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் டைட்டில் ’குரங்கு பெடல்’ என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்தில் முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் குரங்கு பெடல் சைக்கிள் ஓட்டி செல்லும் சிறுவன் ஒருவன் கீழே விழுந்த காட்சியும் இந்த டைட்டில் வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ சிறப்பாக இருப்பதை அடுத்து இந்த படமும் நிச்சயம் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் யாரும் இல்லை என்பது போல் தெரிவதால் உறுத்துதலாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement