• Apr 27 2025

பாரிய கார் விபத்தில் சிக்கிய சோனு சூட் குடும்பம்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பிரபல நடிகர் சோனு சூட் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீஸ் ஆன மதகஜராஜா படத்திலும் அவர் வில்லனாக நடித்து இருந்தார். மேலும் Fateh என்ற படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆனார். 


நேற்று இரவு சோனு சூட் தனது மனைவி சோனாலி அவரின் சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தையுடன் காரில் நாக்பூர் மற்றும் மும்பை இடையே பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென கார் விபத்துக்கு உள்ளாகியது. அவரது மனைவி மற்றும் பிள்ளை இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் சோனாலி மற்றும் குழந்தை காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். அவரது சகோதரி எந்த காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு பின்னர் சோனு சூட் தமது மனைவியுடன் நாக்பூருக்கு சென்றுள்ளார் அங்கு அவர் மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement