தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிப்பவர் நடிகர் சூரி. தற்போது மாமன் படம் வெளியாகி நடிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனையும் படைத்திருந்தது. இந்த நிலையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தளபக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூரி தற்போது தவிர்க்க முடியாத நடிகரகா மாறிவருகின்றார். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று விட்டார். இவரது நடிப்பில் வெளியான மாமன் திரைப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
"மாமன்" திரைப்படம் குடும்ப கதைக்களத்துடன் அமைத்த இந்த திரைப்படத்தினை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி,ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மிக ஆழமான மாமன்,மருமகன் உறவு பற்றி மிகவும் அழகாக இந்த திரைப்படத்தில் கூறப்பட்டிருந்தது .
இதனைத்தொடர்ந்து நடிகர் சூரி தனது ரசிகர்களுக்கு "குடும்பத்துடன் வந்து திரைப்படத்தினை பார்வையிட்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!