• May 29 2025

சிங்கம் come back.! சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்! படக்குழு வெளியிட்ட அப்டேட்..

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உயர்தரமான நடிகர்களில் முன்னணியில் திகழ்பவர் சூர்யா. இந்தத் திறமையான நடிகர், தனது ஒவ்வொரு படத்திலும் தனது ஸ்டைல் மற்றும் நடனம் என்பன மூலம் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்து வருகின்றார். அதற்குச் சிறந்த உதாரணம் தான் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘Retro’ திரைப்படம்.


கடந்த மே 1ம் திகதி சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த "ரெட்ரோ" ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


1980களின் பின்னணியிலும், நவீன காலத்தில் நிகழும் சம்பவங்களையும் இணைத்து, ஒரு காலச்சுழற்சி கதையை சினிமா பாணியில் சொல்லும் இப்படத்தில், சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது.

அத்தகைய படம் தற்போது, மே 31, 2025, அன்று Netflix OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களிடையே மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement