• May 25 2025

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை காலமானார்..! சோகத்தில் திரையுலகம்..

Mathumitha / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுடன் இணைந்து 1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து 100 க்கும் அதிகமான படங்களில் நடித்த இலங்கை நடிகை மாலினி பொன்சேகா காலமானார். "Queen of Sri Lankan Cinema" என அழைக்கப்படும் இவர் சிங்கள மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.


78 வயதாகும் இவர் உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் உள்ள கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


சினிமாவை தவிர அரசியலிலும் ஆர்வம் உள்ள இவர் சில காலம் அரசியலிலும் இருந்துள்ளார். இவரது பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்படுள்ளதுடன் சினிமா பிரபலங்கள் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். 

Advertisement

Advertisement