• Sep 04 2025

வெறித்தனமாக வெளியானது கோட் படத்தின் 'மட்ட' பாடல்! வேற லெவலில் தளபதி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 4வது சிங்கிள் பாடல் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக வெளியாகி உள்ளது.

இசைஞானி  இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா இன்றைய தினம் 45 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் கோட் படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.

கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் கோட் படத்தின் 4வது சிங்களான 'மட்ட' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார்.


இளைய தளபதியின் தமிழக வெற்றிக் கழகத்தின்  கட்சிக்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் விவேக் வரிகளில் தான் தற்போது கோட் படத்தின் மட்ட பாடல் வெளியாகியுள்ளது.

கோட் படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்தப் பாடல் ஆவது நெட்டிசன்களின் ட்ரோல்களில் இருந்து தப்பிக்குமா? ரசிகர்களை திருப்திப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement