சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய "கங்குவா " திரைப்படம் கலவனான விமர்சனங்களை பெற்று படம் தோல்வியடைந்தது. மேலும் இந்த படம் 1000 கோடி வரை வசூலிக்கலாம் என படக்குழு எதிர்பார்த்து இருந்தது. இந்த படம் தோல்வியடைந்ததால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது கார்த்தியின் " வா வாத்தியார் " படத்தினை ஒத்திவைத்துள்ளது.
மேலும் படம் தயாராகிய காலத்தில் "கங்குவா " படத்திற்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் சலுகை ஒன்றை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது படத்தின் நெகடிவ் ரைட்ஸை 600 கோடிக்கு வேண்டுவதாக கேட்டுள்ளனர்.
ஆனால் படக்குழு இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது படம் நஷ்டத்தை சம்பாதித்துள்ள நேரத்தில் இவர்கள் இந்த வாய்ப்பை நழுவவிட்டது. தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
Listen News!