நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி இந்த படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந் இயக்கியுள்ளார். பல பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருந்தாலும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பலராலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு என்னவெனில் இலங்கை தமிழரின் பேச்சு வழக்கு சொற்கள் பயன்படுத்தப்படுள்ளது.
படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இயக்குநர் பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேமஸாகி வருகின்றார். இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது.
இந்த பேட்டியில் அவர் " நான் இதற்கு முன்பு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்ததில்லை. எனக்கு ஒண்ணுமே தெரியலனா கூட, தெரிஞ்ச மாதிரி காமிச்சுப்பேன். ஆனா, உண்மையாக எனக்கு ஒண்ணுமே தெரியாது. அதற்குக் காரணம் எவ்வளவு பயம் இருந்தாலும் அதை வெளியே காமிச்சுக்க கூடாது என்று நினைக்கிறேன். இந்தத் துறையில் டைரக்டராக இருக்கும்போது அது ரொம்ப முக்கியமானது. ஏன்னா, நீங்க பயந்திங்கனா உங்க டீமும் பயந்துருவாங்க. ஏதாவது ஒன்னு நடக்கும் போது நம்ம தைரியமாக இருந்தா தான் அவங்களும் தைரியமாக இருப்பாங்க " என கூறியுள்ளார்.
Listen News!