தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னை பிரபலப்படுத்தி தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வரும் நடிகர் சூரி சமீப காலங்களாக பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். "வெண்ணிலா கபடி குழு" திரைப்படம் நகைச்சுவை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அதேபோன்று "விடுதலை" திரைப்படம் அவரை ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடிக்க வைத்தது.
தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் "மாமன்" என்ற படத்தில் சூரி நடித்துள்ளார் இப்படம் மே 16ம் தேதி திரைக்கு வர இருக்கின்றது. மேலும் சூரியின் அடுத்த படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்பதிவுடன் எல்ரட் குமாரின் "ஆர்.எஸ். இன்போ" இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த டைட்டில் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானதால் அது பெரும் வைரல் ஆகி உள்ளது.
Listen News!