தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனங்களில் அதிகளவான கவனத்தை ஈர்த்துக் கொண்டவர் நடிகை தேவதர்ஷினி. தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய இவர், தற்போது காமெடி மற்றும் உணர்வு பூர்வமான கதாப்பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் "அம்…ஆ" திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள தேவதர்ஷினி, அந்தப் படம் தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தேவதர்ஷினி கூறியதாவது, “15 வருடங்களாக நான் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வருகின்றேன். என்னுடைய நடிப்பைப் பார்த்த மக்கள் ‘ரொம்ப நல்லா சிரிக்க வைக்கிறீங்க!’ என்று புகழ்வார்கள். ஆனாலும், அந்தக் கதைகள் எல்லாம் ஒரு அளவுக்கு தான் என்னுடன் கனெக்ட் ஆகும்." என்றார்.
எனினும், அம்…ஆ படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் ஒரு மன அழுத்தம் மிகுந்த, உணர்வு பூர்வமான பயணம் என்றார். மேலும், தாய்மையின் உணர்வுகள் மற்றும் பெண் எப்படி அநீதிக்கு எதிராக தன்னை மாற்றுகின்றாள் என்பதெல்லாம் அந்தக் கதையில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.” என்றார். இந்தப் படத்தின் ஊடாக தேவதர்ஷினி தாய்மையின் முக்கியத்துவத்தையும் ஒரு பெண்ணின் கஷ்டங்களையும் சினிமாவின் வழியே கூறியிருக்கின்றார்.
Listen News!