• Sep 03 2025

நடிகை த்ரிஷாவை விழுந்து விழுந்து கவனிக்கும் டாப் ஹீரோ! டெய்லி விதம் விதமான சாப்பாடு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்பவர் தான் நடிகை திரிஷா. இவர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இணையாக தற்போது வரையில் புகழின் உச்சியில் காணப்படுகின்றார்.

கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் த்ரிஷா முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஒரு ஹீரோயினாக காணப்படுகின்றார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து  நடித்து வருகின்றார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகையாக காணப்படுகின்றார். அதிலும் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு பெயரை பெற்று கொடுத்தது.

தற்போது  பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சிரஞ்சீவியோடு நடிகை திரிஷா இந்த விஸ்வம்பர படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.


இந்த நிலையில், தனது விஸ்வம்பர படம் குறித்த ஒரு சுவாரசியமான விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது,    தற்போது இருவரும் சேர்ந்து படத்தில் நடித்து வருவதால் சிரஞ்சீவி வரும்போது தனக்கும் சேர்த்து உணவு கொண்டு வந்து பரிமாறுவதாக கூறியுள்ளார். மேலும் நல்ல உணவுகளை கொடுத்து தனது டயட்டை கெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். நடிகர் சிரஞ்சீவி ஒரு சாப்பாட்டு பிரியர் ஆவார், ஆகவே அவர் நடிகை த்ரிஷாவுக்கும் வகை வகையான உணவுகளை கொடுத்து அசத்தியள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement