• Jul 23 2025

பிச்சை எடுப்பேன்னு TR சொன்னாரு.. அப்புடியே நடந்திட்டு..! சரவணனின் அதிரடிக் கருத்து வைரல்.!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்புக்கும், பாரம்பரியமான தமிழரின் தோற்றத்துக்கும் பிரதிநிதியாக திகழ்ந்தவர் நடிகர் சரவணன். இவர் சினிமா மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார்.


இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சரவணன், தனது கடந்த வாழ்க்கைப் பயணத்தை குறிப்பிட்டு, டி. ராஜேந்தர் கூறிய ஒரு முக்கியமான வார்த்தை அவருடைய வாழ்க்கையை எப்படி பாதித்தது என்பது குறித்தும் சிறப்பாக கதைத்திருந்தார். 


அந்த நேர்காணலில் சரவணன், "நான் 26 வயதில் இருந்தபோது டி. ராஜேந்தர் என்னைப் பார்த்து, ‘உச்சனை உச்சம் பார்த்தா நீ பிச்சை எடுப்பாய்.  பிச்சை எடுக்கப் போறா என்று சொன்னார்."

அதைக்கேட்ட உடனே சரவணன் அதிர்ச்சியுடன், “அண்ணா, என்ன இப்டி சொல்லுறீங்க? என் கையில 13 படங்கள் இருக்கு!” என்று பதிலளித்ததாக கூறினார்.

சரவணன் தனது விளக்கத்தில் தொடர்ந்து, "அவர் சொன்னது போலவே, 29 வயதுக்குப் பிறகு நான் வீட்டில இருந்துட்டேன். வாய்ப்புகள் குறைந்தன. முன்னிலை நடிகராக இருந்த என் வாழ்க்கையில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது." என்றார்.

"அப்புறம் 40 வயதுக்கு மேல நீ நல்லா இருப்பான்னு சொன்னாங்க. அதே மாதிரி என்னுடைய 40 வயதில் தான் 'பருத்தி வீரன்' வெளியானது " எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement