• Jul 18 2025

விஜய் படத்தால் நேர்ந்த விபரீதம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தில் மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து குறித்த அருவி எங்கு உள்ளது என இந்தியாவில் உள்ள பலரும் இணையத்தில் தேடி அங்கு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் குறித்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது சுமார் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  மீட்பு படையினர் சுமார் ஆறு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு குறித்த இளம் பெண்ணை பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர்.

எனினும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளார். குறித்த பெண் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பால்லோவெர்ஸ் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement