பாலிவுட் நடிகையான ஊர்பி ஜாவேத், சமூக வலைத்தளங்களில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக கையில் கிடைக்கும் பொருட்களை உடையாக அணிந்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதன்படி பிளாஸ்டிக் பாட்டில், செய்தித்தாள்கள் போன்ற பல பொருட்களை அவரது கவர்ச்சி உடைகளாக மாற்றி வருகின்றார்.
இவரது செயற்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றாலும் பல வித விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன. ஆனாலும் சமீபத்தில் 'வாழ்க்கை பாதை எளிதல்ல.. நான் பல தடவை மனமுடைந்துள்ளேன்.. விமர்சனங்களையும் தாண்டி கொலை, கற்பழிப்பு மிரட்டல்களையும் எதிர்கொண்டு உள்ளேன்..
ஆனாலும் எதற்கும் துணிந்தவள் நான்.. எந்த விமர்சனங்களும் என்னை கட்டுப்படுத்தாது.. இந்த உலகுக்கு முக்கியமானவர் நான் என ஊர்பி பேட்டியொன்றில் கூறியிருந்தார்..
அதே நேரத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வேண்டும் என்பதற்காக 18 வயதிலேயே லிப் பில்டரை போட்டுக் கொண்டுள்ளார். அது சரியாக இல்லை என்று ஒன்பது வருடங்கள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த ஊர்பி, உதட்டில் ஊசி போட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதன் போது அவரது உதடுகள் வீங்கி கன்னம் பெரிதாக உக்கிரமாக காணப்பட்டார். அது பெரிதளவில் வைரலானது.
இதைத்தொடர்ந்து முறையான சிகிச்சை பெற்று அதனை சீர்திருத்திக் கொண்டுள்ளார். அதன் பின்பும் வித்தியாசமான பொருட்களைக் கொண்டு தனது கவர்ச்சியை காட்டி வருகின்றார்.
இந்த நிலையில், தற்போது ஊர்பி ஜாவேத் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு வித்தியாசமாக ஜொலித்து வருகின்றார் ஊர்பி. இதோ அந்த வீடியோ,
Listen News!