தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழும் ரவி மோகன் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். ஆனாலும் விழுந்து விடாமல் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், கதையின் நாயகனாக நடிக்கும் 'ப்ரோ கோட்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கி இருக்கிறார்.
மேலும், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும்' தி ஆர்டினரி மேன்' எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார் ரவி மோகன். இது தொடர்பான போஸ்டரும் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில், ஜெயம் படத்தின் மூலம் வெற்றி நாயகனாக அவதாரம் எடுத்த ரவி மோகன் கைவசம் உள்ள படங்களில் லிஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டுக்குள் ரவி மோகன் நடிப்பில் பார் கோட், கராத்தே பாபு, ஜீனியர் 30, ஜீனி, சங்கமித்ரா, பராசக்தி, மற்றும் தனி ஒருவன் 2 போன்ற படங்களில் கமிட் ஆகியுள்ளார். இது ரவி மோகன் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக காணப்படுகிறது.
Listen News!