தமிழ் சினிமாவில் தற்போது பின்னணி பாடகர்கள் என்றாலே பெரும்பாலும் ரியாலிட்டி ஷோக்களின் ஊடாக வந்தவர்களாகத் தான் காணப்படுகின்றார்கள். இதனால் பல ஹிட் பாடல்களை பாடிய பாடகர்கள் வாய்ப்பின்றி காணாமல் சென்று விடுகின்றனர்.
ரோஜா ரோஜா பாடல் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பாடகர் சத்யன் மகாலிங்கம். சிறுவயதிலேயே இந்தப் பாடலை படத்தில் வருவது போல் அதே வசீகரத்துடன் மேடையில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கலக்கப்போவது யாரு?.., சரோஜா படத்தில் தோஸ் பட தோஸ்த்.. என்கிற பாடலையும், கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் உள்ளிட்ட பல பாடல்களையும் பாடியுள்ளார்.
இவ்வாறு சுமார் 200க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்கள் பாடிய பாடகர் சத்யன் தனக்கு பாடுவதற்கு எந்த வித வாய்ப்புகளும் கிடைக்கவில்லை இதனால் ஹோட்டலில் கூட வேலை பார்த்ததாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் பாடிய ரோஜா ரோஜா பாடல் மீண்டும் டிரெண்டிங் ஆன நிலையிலேயே இவருடைய பேட்டியொன்று வைரலாகியுள்ளது.
அதன்படி அவர் கூறுகையில்,
கொரோனாவுக்குப் பிறகு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் யாரும் பாட அழைக்காததால் ஹோட்டலில் வேலைக்குச் சென்றேன். அங்கு ஹோட்டல் மெயின்டனன்ஸ் வேலையில் சம்பாதிக்க தொடங்கினேன். இதனை அமெரிக்காவில் நான்கு மாதம் செய்தேன்.
பின்னணி பாடர்களுக்கு பெரிதளவில் வாய்ப்புகள் கிடைக்காது. பாடகர்களாக வந்த நிறைய பேரும் இந்த வேலை வேண்டாம் என்று விவசாயம் பார்க்க சென்றதும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் பல பாடகர்கள் சான்ஸ் கேட்டு அலைவதை விட பாப்புலர் ஆவதை பற்றி தான் சிந்திக்கின்றனர். அதை நோக்கி தான் ஓடிக் கொண்டுள்ளார்கள். நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராக சென்றேன். அந்த ஷோவில் நான் போட்டியாளராக கலந்து கொண்டால் பாப்புலர் ஆகலாம் என முடிவு செய்து வாய்ப்பு கேட்டேன். ஆனால் என்னை போட்டியாளராக களம் இறக்கினால் பிரச்சனை வரும் என மறுத்துவிட்டார்கள்.
இசை அமைப்பாளர்கள் கூட இன்று பாப்புலர் ஆனவர்களை தான் நாடுகிறார்கள். மேலும், ஏ .ஆர் ரகுமான், அனிருத் போன்றவர்களின் கச்சேரி என்றால் மட்டுமே மக்கள் அவர்களுக்காக படை எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் பிரபல இசை நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆனவர்கள் தான் என்று தனது ஆதங்கத்தை பேசி உள்ளார் சத்யன்.
Listen News!