தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் திகழ்பவர் தனுஷ். இவருடைய இயக்கத்தில் 4வது படமாக உருவாகும் படம் தான் 'இட்லி கடை'. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இட்லி கடை படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.
இட்லி கடை எப்படியான கதைக் களத்துடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்படுகின்றது. இந்த படம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் யாவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இட்லி கடை படத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன் தனுஷுடன் நடித்த அனுபவம் பற்றியும் படத்தைப் பற்றியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இவருடைய பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளதோடு படம் வெற்றி பெற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி அவர் கூறுகையில்,
‘Mischievous’ பார்த்திபன் Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்!
குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடு படுகிறேன்.’இட்லி கடை’யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்.
Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம் கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக அது பற்றி 14-ல் நேருக்கு நேர் நேரும்!
குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான். இந்த ஆர் அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமென்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி. இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்…. It tally with a tale of ‘Italy shop’ by Danish என பதிவிட்டுள்ளார் .
Listen News!