தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் காஜல் அகர்வால். தற்போது திருமணம் ஆகி இவருக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி உள்ளார்.
இந்த நிலையில், பிரபல நடிகை காஜல் அகர்வால் விபத்தோன்றில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. இந்த துயரமான செய்தி காஜல் அகர்வால் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று காஜல் அகர்வாலுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சித்தது. ஆனாலும் அவருடைய பதிலை பெற முடியவில்லை. ஆனால் அவர் நலமாக உள்ளார் என்ற மகிழ்ச்சியான தகவலை கொடுத்துள்ளது.
அதன் பின்பு அழைப்பை எடுத்த காஜல் அகர்வால், தான் இப்போது வேலையாக இருக்கின்றேன்.. பின்னர் உங்களை தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்துள்ளாராம். இதனால் காஜல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றார் என்பது உறுதியானது.
அதே நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் விபத்தில் சிக்கியதாக பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடவுளின் அருளால் நான் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றேன்.. தயவு செய்து இது போன்ற தவறான செய்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம் என தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார் காஜல். தற்போது இந்த தகவல் வைரலாகியுள்ளது.
Listen News!