தமிழ் சினிமாவில் மதராஸி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வேதிகா, முனி படத்தில் ராகவா லாரன்ஸுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அழகான தோற்றம், ஸ்லிம் உடல், இனிமையான நடிப்பு என பன்முகத் திறமையுடன் திரை உலகில் பிரவேசித்தாலும், தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய வாய்ப்புகள் அமையவில்லை.
காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ராப் போன்ற படங்களில் தனது தனித்துவத்தை காட்டிய வேதிகா, பின்னர் மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் தன்னுடைய திறமையை பரப்பினார். தற்போது ஒரு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருவதுடன், தமிழ் திரையுலகில் கஜானா எனும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
சினிமாவில் எப்படியாவது பெரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும், முன்னணி நடிகையாக உயர வேண்டும் என்ற உறுதியுடன் கடுமையாக உழைத்து வரும் வேதிகா, ரசிகர்களுடன் தொடர்பை நிலைநாட்டும் விதமாக அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்டைலிஷ் உடையில் தோன்றி அட்டகாசமாக போஸ் கொடுத்த வேதிகாவின் இந்த வீடியோ, இன்ஸ்டாவில் அவரது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
Listen News!