பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் மீனாவைப் பார்த்து தனக்கு இன்னும் ஒரு நாலு நாளில சம்பளம் வரப்போகுது என்று சொல்லுறார். மேலும் உனக்கு என்ன வேணும் என்று சொல்லு வாங்கித்தாறேன் என்கிறார். அதைக் கேட்ட மீனா எனக்கு எதுவுமே வேணாம் என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா சம்பளம் வாறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கு அதுக்குப் பிறகு ஜோசிப்போம் என்கிறார்.
மறுநாள் காலையில ராஜி அரசியை பார்த்து நல்லா தூங்கினியா என்று கேட்கிறார். அதுக்கு அரசி அதெல்லாம் நல்லா தான் தூங்கினான் என்று சொல்லுறார். பின் அரசி ராஜி கிட்ட உங்க அண்ணனுக்கு எதிராக பேசப்போறேன் என்று நீங்க ஏதும் நினைக்கிறீங்களா என்று கேட்கிறார். அதுக்கு ராஜி நீ அவனுக்காக பேசுறதை நினைக்க எனக்கு சந்தோசமாத் தான் இருக்கு என்று சொல்லுறார்.
இதனை அடுத்து சக்திவேல் முத்துவேலைப் பார்த்து உங்க பொண்ணு வீட்ட வாறதுக்காக என்னவெல்லாம் செய்தீங்க அதில கொஞ்சமாவது என்ர பையனுக்காக செய்தீங்களா என்று கேட்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் நான் அவனை வெளில கொண்டுவாறதுக்கான எல்லா வேலையையும் பார்க்குறேன் என்கிறார்.
அதனைத் தொடர்ந்து சரவணன் அரசி கிட்ட ஹோர்ட்டில என்ன பிரச்சனை என்றாலும் உடனே எனக்கு கால் பண்ணு என்கிறார். பின் சக்திவேலோட அம்மா பாண்டியன் கிட்ட குடும்ப கெளரவத்திற்காக நீங்க சரவணன் மேல கொடுத்த புகாரை திரும்ப வாங்கிக்க சொல்லுறார். அதைக் கேட்ட பாண்டியன் இந்த விஷயத்தில மட்டும் நான் உங்கட பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!