நடிகர் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில், பிரபல நடிகரும் பேச்சாளருமான நிழல்கள் ரவி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் அமைந்துள்ள தென் பொதிகை ராகவேந்திரர் ஆலயத்தில் நடைபெற்ற 354-வது குருபூஜை விழாவில், நிழல்கள் ரவி மற்றும் அவரது மனைவி விஷ்ணு பிரியா கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா நிறைவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் தற்போது பல முக்கிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
அதில் குறிப்பாக, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும், கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, சூர்யா நடிக்கும் இன்னொரு புதிய படத்திலும் தாம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அவர் தெரிவித்தார். இது அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனித்துவமான அரசியல் மற்றும் சமூகக்கருத்துகளை பிரதிபலிக்கவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அரசியல் ரீதியாக புதிய பாதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் இப்படம், வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ளது.
Listen News!