தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பிற்கும், வித்தியாசமான கதைத்தேர்வுகளுக்குமான அடையாளமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விளங்குகின்றார். தற்போது நடித்து முடித்துள்ள 'ஏஸ்' திரைப்படம் மே 23ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஆறுமுககுமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானதும், இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஏஸ்’ என்பது வெறும் சினிமா டைட்டில் அல்ல. இந்தப் படம், ஒரு மனிதனின் வாழ்க்கையில் இடம்பெறும் சவால், சமுதாய எதிர்ப்புக்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது என கூறப்படுகின்றது. அதற்கான திரைப்பணிகள் முடிந்து, தற்போது இறுதி விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய் சேதுபதி – யோகி பாபு கூட்டணி என்றாலே, காமெடி மட்டுமல்ல, கதையின் முக்கியமான திருப்பங்களும் காணப்படுகின்றன. இந்தப் படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஏஸ்' டிரெய்லர், யூடியூப்பில் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகின்றது.
Listen News!