ஜீ தமிழ் தொலைக்காட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கென ஒரு தனிச்சிறப்பை ஏற்படுத்தி, ரசிகர்களிடையே அதிகளவிலான பிரபலத்தையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக, சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்பன ஜீ தமிழின் வெற்றிக்கு காரணமாக விளங்குகின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் 'சரி கம பா ' மற்றும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' ஆகிய இரண்டும் நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களிடம் அதிகளவு வரவேற்பினைப் பெற்றுள்ளது.
சிறுவர்களுக்கான இசை நிகழ்ச்சியான 'சரி கம பா', ஒரு பன்முகத் திறமை மூலம் இசை உலகையே பிரமிக்கவைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லுகின்ற நிலையில், ஒவ்வொரு எபிசோட்டும் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி வருகின்றது.
இதேபோன்று, ஜோடிகளாக சேர்ந்து வெவ்வேறு நடனத் திறமைகளை நிரூபித்து வரும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியும் ஜீ தமிழின் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகவுள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் ரசிகர்களை அசர வைக்கின்ற வகையில் தங்களது திறமைகளைக் காட்டி வருகின்றார்கள்.
அனைத்து தொலைக்காட்சிகளும் மகா சங்கமம் நிகழ்ச்சிகளை தங்கள் சீரியல்களுக்கு இடையே நடத்தி வந்தனர். எனினும், ஜீ தமிழ் புதிய முயற்சியாக, இரு வெவ்வேறு ரியாலிட்டி ஷோக்களை இணைத்து ஒரு 'மகா சங்கமம் ' நிகழ்ச்சியை நடாத்தி, பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கவுள்ளது.
இந்த நிகழ்வில் சரி கம பா மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள் ஒரே மேடையில் சந்தித்து கலகலப்பான நிகழ்வுகளுடன் ரசிகர்களை மயக்கவுள்ளனர். காமெடி, பாடல், நடனம் மற்றும் நெகிழ்ச்சி என அனைத்தும் கலந்த ஒரு மாஸ் ஷோவாக இது அமைந்துள்ளது.
அதன் போது போட்டியாளர் ஒருவர் இதுவரை தனது காதில் தோடு குத்தவில்லையென்று கூறியதனைக் கேட்ட நடிகை சினேகா அக்குழந்தைக்கு தோட்டினை அணிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மகா சங்கமம் உண்மையாகவே ஒரு உணர்வு பூர்வமான திருவிழாவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!