ரெட்ரோ திரைப்படம் மே 1ம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வருகின்றது. இதில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பற்றிய சில விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இத் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் எனப் பலர் நடித்துள்ளார்கள். அத்துடன் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத் திரைப்படம் 70 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் முதல் நாளே நல்ல வசூலைப் பெற்று சாதனை படைத்திருந்தது.
அந்த வகையில் படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே போன்று வில்லனும் முக்கியம். இத் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யாஷங்கர் நீலமேகம். இவர் சிறந்த நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியதுடன் இவர்தானா அந்த நடிகர் என்ற கேள்விகளையும் பதிவிட்டு வருகின்றனர் .
Listen News!