விஜய் டிவி மூலம் புகழ்பெற்று சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான வசியை திருமணம் செய்து கொண்ட அவர் திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் 'உங்க வாய் உங்க உருட்டு' என எழுதப்பட்ட T-Shirt உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி "இதுக்கு காரணம் யார்?", "யாரை டார்கெட் பண்ணிராங்க?" என்ற கேள்விகளை எழச் செய்துள்ளது.
பிரியங்கா எப்போதும் நையாண்டி கலந்த நேர்மையான பதிப்புகளைக் கூறுவதில் முக்கியமாக வலியுறுத்தி வருவார் என்பதால் இந்த பதிவும் தனது ரசிகர்களிடம் ஒரு மெசேஜாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!