தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தற்போது அரசியல் தலைவராக உள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விலகியுள்ள வைஷ்ணவி, கட்சி தொண்டர்களால் தொடர்ச்சியாக ஆன்லைனில் ஆபாசமான மற்றும் அவதூறான பதிவுகள் செய்யப்படுவதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த பிறகு பேசிய வைஷ்ணவி, “நான் கட்சியைவிட்டு வெளியேறிய நாளிலிருந்து, தவெக தொண்டர்கள் என தங்களை அடையாளம் கூறும் சிலர் தொடர்ந்து என்னை அவமதிக்கும் வகையிலும் திட்டி வருகிறார்கள். இது பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அரசியலில் ஈடுபட முடியாத சூழலை உருவாக்குகிறது,” என்றார்.
தலைவர் விஜய் இதுபோன்று கட்சியின் பெயரில் நடக்கும் செயல்களுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையாவது வெளியிடுவாரென எதிர்பார்த்தேன், ஆனால் அவர் மௌனமாக இருக்கிறார் என்பதே எனக்கு ஏமாற்றம் எனவும் அவர் கூறினார்.
“இளம் பெண்கள் அரசியலில் வருவதை ஊக்குவிக்க வேண்டிய நேரத்தில், இப்படி அவர்களை திட்டும் சூழல் உருவாக்கப்படுவதை தாண்டி அவர் தொண்டர்களை Virtual Warriors என பெருமையாக குறிப்பிடுகிறார். இது பொருத்தமற்றது,” எனவும் வைஷ்ணவி குற்றம்சாட்டினார். மேலும் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!