• Sep 04 2025

‘காட்டி’திரைப்படத்தின் ரிலீஸ் கிளிம்ப்ஸ் வெளியிட்ட படக்குழு!ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது காட்டி (Ghaati) எனும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். தமிழ் நடிகர் விக்ரம் பிரபு இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் என்பதுதான் இந்த படத்தின் சிறப்பம்சம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நாளை (செப்டம்பர் 5) grand release ஆகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


படம் வெளியாகும் முன்னேவே, முன்பதிவுகள் (pre-bookings) தொடங்கி பல இடங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றன. தணிக்கை குழுவின் தரப்பில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், படம் தொடர்பான Release Glimpse வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டது. அந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அனுஷ்காவும், விக்ரம் பிரபுவும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement