இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, ஜெயராம் எனப்பலர் நடிப்பில் வெளியான திரைப்படம்"கேம் சேஞ்சர்" இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. தற்போது எடிட்டர் ஷமீர் முகமது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது "கேம் சேஞ்சர்" திரைப்படத்தின் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் "கேம் சேஞ்சர்" திரைப்படத்திற்கு எடிட்டராக ஷமீர் முகமது பணிபுரிந்துள்ளதாகவும் " கேம் சேஞ்சர்" எடிட்டிங் செய்யும் போது திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஏழரை மணி நேரமாக இருந்ததினை மூன்று மணி நேரமாக குறைத்தேன். மேலும் ஒருவருடத்தில் முடிய வேண்டிய திரைப்படம் மூன்று வருடங்கள் தாமதமானதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் புதிய எடிட்டராக பணிபுரிந்த ரூபன் 2.45மணி நேரமாக குறைத்திருந்தார். மேலும் கூறுகையில் சங்கர் சேர் கூட வெர்க் பண்ண அனுபவம் நல்லதாக அமையவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!