தமிழ் சினிமாவில் கலக்கல் நடிகராக பலரது மனதையும் கவர்ந்தவர் சூர்யா. அவரது ரசிகர்களுக்கு 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கஜினி’ திரைப்படம் என்றுமே நினைவில் இருக்கும். அந்தப் படத்தில் அவர் நடித்த சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரம், தமிழ்த் திரையில் தனிப்பட்ட அடையாளமாகவே இருந்தது.
அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வாட்டர்மெலான் சாப்பிடும் சீன், அந்தக் கதாபாத்திரத்தின் மெமரி லாஸ் ஸ்டேட்டையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்திய ஐகானிக் moment. தற்போது அதே மாதிரியான காட்சி, சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள புதிய திரைப்படமான ‘கருப்பு’ படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்பட டீசர் இன்று வெளியானது. சூர்யாவின் 50வது பிறந்த நாளையொட்டி வெளியான இந்த டீசரில், ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்ட ஒரு முக்கியமான விடயம் வாட்டர்மெலான் சாப்பிடும் காட்சி!
சில விநாடிகள் மட்டுமே தோன்றும் காட்சியில், சூர்யா ஒரு வாட்டர்மெலானை சாப்பிடும் காட்சி காட்டப்படுகிறது. இதை பார்த்த பலரும் “இது கஜினி படத்தில் இடம்பெற்ற அதே சீன் மாதிரி இருக்கே..!” என ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
இப்போது, ‘கருப்பு’ படத்தில் அதே செயலை மீண்டும் சூர்யா செய்வது ரசிகர்களிடையே பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் சிலர் "கருப்பு" படத்தில் இவ்வாறாக ஆர்.ஜே. பாலாஜி எத்தனை சஸ்பென்ஸ் வைத்துள்ளாரோ.? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
Listen News!